இந்தியா

ஜேஎன்யு முதல் பெண் துணைவேந்தராக முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் நியமனம்!

DIN

புது தில்லி: தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்து வரும் சாந்திஸ்ரீ பண்டிட்(59) தற்போது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின்(ஜேஎன்யு) துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர் ஆவார், அங்கு அவர் தனது எம்ஃபில் படிப்பை முடித்து சர்வதேச உறவுகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தாராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார். பண்டிட் நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பல்கலைக் கழக துணைவேந்தராக இருப்பார் என்று மூத்த அதிகாரி கூறினார். 

சாந்திஸ்ரீ பண்டிட், முதன்முதலாக 1988 இல் கோவா பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அதன்பிறகு 1993 இல் புணே பல்கலைக்கழகத்திற்கு சென்றார். சாந்திஸ்ரீ மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளையும் வகித்துள்ளார்.

அவர் பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பார்வையாளர்களைப் பரிந்துரைக்கும் உறுப்பினராகவும் சாந்திஸ்ரீ இருந்துள்ளார்

சாந்திஸ்ரீ பண்டிட் பேராசிரியராக இருந்த காலங்களில் 29 பேருக்கு அவர் முனைவர் பட்டம் பெற வழிகாட்டி பேராசிரியராக இருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

மாமாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

SCROLL FOR NEXT