இந்தியா

5 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மன்சுக் மாண்டவியா

DIN

நாடு முழுவதும் இதுவரை 5 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று தெரிவித்தார். 

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், 

உலகளவில் அதிகபட்சமாக இந்தியா முழுவதும் 170.21 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 15 முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் இதுவரை 66 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முதல் தவணை செலுத்திய 28 நாள்களில் இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள் ஆவர். 

இந்நிலையில், இதுவரை 5 கோடி சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT