நாட்டில் இதுவரை 170.21 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 170.21 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 170.21 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55,78,297 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,70,21,72,615 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் 1,80,456 பேர் கரோனா நோயிலிருந்து விடுபட்ட நிலையில், இதுவரை மொத்தம் 4,08,40,658 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தோர் விகிதம் 94.46 சதவீதமாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.