முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் பிப்.10 முதல் 1-9ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

ஹரியாணாவில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள்(பிப்.10) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. 

Updated On : 8 பிப்ரவரி, 2022 at 8:30 PM
பகிர்:

ஹரியாணாவில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள்(பிப்.10) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. 

ஹரியாணா அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி, 

மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்துவருவதையடுத்து, கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி நாளை மறுநாள்(பிப்.10) பள்ளிகள்  திறக்கப்பட்டுள்ளன. 

Advertisement

ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ளன அதேசமயம் ஆன்லைன் முறையில் வகுப்புகளும் தொடரப்படுகின்றன.

முன்னதாக, 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டது.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15-18 வயதுடைய சிறார்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.