பங்குச்சந்தை 150 புள்ளிகள் உயர்வுடன் தொடக்கம்
வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்.8) பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியது. சென்செக்ஸ் 150 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
வர்த்தகத்தின் இரண்டாம் நாளான இன்று (பிப்.8) பங்குச்சந்தை வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 57,777.65 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.27 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 48.75 புள்ளிகள் உயர்ந்து 17,262.35 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.28 சதவிகிதம் உயர்வாகும்.
Advertisement
சென்செக்ஸ் பட்டியலில் மாருதி 1.83 சதவீதம் உயர்ந்து, டைட்டன், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து உயர்ந்தன.
பவர்கிரிட், டிசிஎஸ், எஸ்பிஐ, என்டிபிசி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை நஷ்டமடைந்தன.