இந்தியா

ஹிஜாப் விவகாரத்தில் கலவரத்தில் இறங்கும் மாணவர்கள்: 144 தடை விதித்த அரசு

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாதென மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், கர்நாடக மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

DIN

ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாதென மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால், கர்நாடக மாநிலத்தின் இரு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஹிஜாப் விவகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிறகும் கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு நீடித்து வருவதால், பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 

கர்நாடக மாநிலம் பாகல்கோட், ஷிவமொக்கா ஆகிய இரு பகுதிகளில் ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவிக்கும் மாணவர்களும், எதிர் தரப்பு ஹிந்து மாணவர்களும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதால், அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் குந்தாப்பூர் அரசு பி.யூ. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்குத் தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த விவகார்த்தில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இரு தரப்பு கல்லூரி மாணவர்களும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஷிவமொக்கா மாவட்டத்தின் பாபுஜிநகரிலுள்ள கல்லூரி மாணவர்கள் ஹிஜாப் அணிய ஆதரவு தெரிவித்து ஒருதரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினரும் கோஷங்களை எழுப்பினர். ஒருகட்டத்தில் இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். இதனால் காவல் துறையினர் தடியடி நடத்தி மாணவர்களை கலைத்தனர். 

இதேபோன்று பாகல்கோட் பகுதியிலும் இருதரப்பினரிடையே கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டதால், பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த இரு பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் இன்று உலக மகளிா் உச்சி மாநாடு! முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்அ

நுண் நெகிழி பாதிப்புகள்: ஐஐடி-ன் உதவியை நாடிய அரசு

மருமகளுக்கு எதிராக வழக்கு: மாமனாருக்கு அபராதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுடன் அரசு ஆலோசனை நடத்த வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

கரூா் வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை!

SCROLL FOR NEXT