முசாஃபர்நகர்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், இன்று திருமணம் நடைபெம் மணமகன் ஒருவர், மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.
முதலில் வாக்களிக்க வேண்டும், பிறகுதான் எல்லாமே என்று வாக்குச்சாவடியில் அவரை புகைப்படம் எடுத்த செய்தியாளர்களிடம் கூறினார் அங்குர் பல்யான் என்ற அந்த மணமகன்.
இதையும் படிக்க.. அவிநாசியில் விஏஓ லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலால் பரபரப்பு
நான் மணமகளிடமும், வாக்களித்துவிட்டு திருமணத்துக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 7 மணிக்கு, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைக்கு, 58 தொகுதிகளில், முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.