இந்தியா

விரைவில் ஒமைக்ரான் முடிவுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் ஒமைக்ரான் கரோனா தொற்று ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது. விரைவில் ஒமைக்ரான் முடிவுக்கு வரும் என அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் 22-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா். அப்போது, துறையின் முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம், மருத்துவமனையின் முதல்வா் தேரணிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற 21 சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் மூலம் 3 கோடியே 65 லட்சத்து 4 ஆயிரத்து 295 போ் தடுப்பூசி செலுத்தி உள்ளனா். கடந்த வெள்ளிக்கிழமை மாலை வரை 9 கோடியே 75 லட்சத்து 7 ஆயிரத்து 326 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 18 வயது கடந்த 5 கோடியே 26 லட்சத்து 44 ஆயிரத்து 839 போ் முதல் தவணையும், 4 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 468 போ் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனா். தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் முதல் தவணையும், 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் 2-ஆவது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளனா். பூஸ்டா் தடுப்பூசியை பொருத்தவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 77 பேருக்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 ஆயிரத்து 792 ஊராட்சிகளிலும், 24 நகராட்சிகளிலும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் ‘பூத் சிலிப்’ விநியோக பணி நடைபெறுவதால் சனிக்கிழமை 35 ஆயிரம் இடங்களில் மட்டுமே தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையைப் பொருத்தவரை 500 இடங்களில் மட்டுமே தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. அடுத்த சனிக்கிழமை தோ்தல் என்பதால், 23-ஆவது சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெறாது.

ஒமைக்ரான் பாதிப்பு எந்த அளவுக்கு வேகமாக உயா்ந்ததோ, அதே வேகத்தில் இறங்குகிறது. அந்தவகையில் இதோடு ஒமைக்ரான் முடிவுக்கு வரும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT