இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கரோனா 3-ஆம் அலை குறைந்ததையடுத்து, இன்று முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியது. 

DIN

ஜம்மு-காஷ்மீரில் கரோனா 3-ஆம் அலை குறைந்ததையடுத்து, இன்று முதல் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கியது. 

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பிப்ரவரி 14 முதல் தொடங்கலாம் என்று மாநில செயற்குழு அறிவித்திருந்தது. அதன்படி, 9ஆம் முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கியது. 

மாணவர்கள் சீருடை அணிந்தும், தடுப்பூசி சான்றிதழ்கள் கையில் வைத்திருந்தபடி பள்ளிக்கு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இருப்பினும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்பட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேவையான ஏற்பாடுகளைச் செய்தபின் ஓரிரு நாட்களில் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

காஷ்மீரின் குளிர்கால மண்டலம் மற்றும் ஜம்மு பகுதியில் பனி சூழ்ந்த பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகள் தற்போது குளிர்கால விடுமுறையில் உள்ளன.

குளிர்கால மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆஃப்லைன் கற்பித்தல் பிப்ரவரி 28க்குப் பிறகு தொடங்குகின்றது. 

கோடை மண்டல பள்ளிகளில், ஜூனியர் வகுப்புகளுக்கான ஆஃப்லைன் கற்பித்தல் முறை பிப்ரவரி 21 முதல் தொடங்க உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவிலும் குடும்ப அரசியல்: செங்கோட்டையன் அதிர்ச்சித் தகவல்!

உலகக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகை அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானியின் ரூ.3,000 கோடி சொத்துகள் முடக்கம்!

ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 7 பேர் பலி, 150 பேர் காயம்!

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் 35 பேர் கைது

SCROLL FOR NEXT