இந்தியா

பஞ்சாபில் இன்று மோடி பிரசாரம்: தீவிர கண்காணிப்பில் பாதுகாப்புப் படை

DIN

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ள நிலையில், பாதுகாப்புப் படையினர் பலத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் ஜலந்தாரில் நடைபெறவுள்ள பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். இதையடுத்து, பஞ்சாப் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஜனவரி 5ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பஞ்சாப் வந்த பிரதமர் மோடியின் வாகனம் செல்லும் சாலையில் போரட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டிருந்ததால் 20நிமிடங்கள் சாலையில் காத்திருந்து மீண்டும் தில்லிக்கு மோடி திரும்பினார்.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT