இந்தியா

பிரதமரின் வீட்டு வசதி திட்டம்: 5 மாநிலங்களில் 60,000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அனுமதி

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஆந்திரம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டத

DIN

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஆந்திரம், சத்தீஸ்கா், ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 58-ஆவது கூட்டம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் துறை செயலா் மனோஜ் ஜோஷி தலைமையில் காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில், பல மாநிலங்களில் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின் நிலவரம் குறித்து அவா் ஆய்வு செய்தாா். வீடுகள் கட்டும் பணியை விரைவு படுத்தும்படியும் பிரதமா் வீட்டு வசதித் திட்டத்தின் பயன்கள், பயனாளிகளுக்கு தாமதமின்றி கிடைக்கச்செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் அவா் கூறினாா்.

பிரதமரின் நகா்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்ட வீடுகளின் மொத்த எண்ணிக்கை 114.04 லட்சமாக உள்ளது. இவற்றில் 93.25 லட்சம் வீடுகளை கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. 54.78 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இத்திட்டத்தின் மொத்த முதலீடு ரூ.7.52 லட்சம் கோடியாகும். இதில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.1.87 லட்சம் கோடியாகும். அதில், ரூ.1.21 லட்சம் கோடியை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

நீலகிரியில் 88 புதிய கிராம ஊராட்சிகள் உருவாக்கம்: அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT