கேரளம்: புதிதாக 12,223 பேருக்கு கரோனா, 25 பேர் பலி
திருவனந்தபுரம்: கேரளத்தில் புதன்கிழமை கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,223 ஆகப் பதிவானது.
கேரளத்தில் புதன்கிழமை கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,223 ஆகப் பதிவானது.
இது தொடா்பாக மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கேரளத்தில் புதன்கிழமை 12,223 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியது.
வியாழக்கிழமை நிலவரத்தையடுத்து, மாநிலத்தில் மொத்த கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 63,81,063-ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சையில் 1,13,798 பேர் உள்ளனர். மேலும், இன்று கரோனாவால் 25 போ் பலியானதால் இதுவரையான உயிரிழப்புகள் 63,019 ஆக உயர்ந்துள்ளது.