இந்தியா

நாளை முதல் பிப்.22 வரை ஒடிசா, ஆந்திரம் மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் பயணம்

DIN

ஒடிசா, ஆந்திரப் பிரதேச ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஒடிசா மாநிலம், புரியில் கௌடியா மடத்தையும், இயக்கத்தையும் நிறுவிய ஸ்ரீமத் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்-ன் 150-வது பிறந்த ஆண்டின் 3 ஆண்டு கால கொண்டாட்டங்களை பிப்ரவரி 20ஆம் தேதி அவர் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து பிப்ரவரி 21ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் கப்பல் படை போர் விமானத்தை ஆய்வு செய்யும் குடியரசுத் தலைவர் அணிவகுப்பையும் பார்வையிடுகிறார். 

கப்பல் படை போர் விமானத்தை குடியரசுத் தலைவர் ஆய்வு செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக முப்படைகளின் உயர்நிலைத் தலைவர் என்ற முறையில் குடியரசுத் தலைவரின் பதவிக்காலத்தில் ஒரு முறை இந்திய கப்பல் படையின் போர் விமானத்தை அவர் ஆய்வு செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT