இந்தியா

ஆந்திர தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி மாரடைப்பால் மரணம்

ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார். 

DIN

ஆந்திர மாநில தொழில்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி மாரடைப்பால் காலமானார். 
ஆந்திர மாநில தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி(50). நேற்று துபையில் இருந்து ஹைதராபாத் திரும்பிய இவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று காலமானார். கௌதம் ரெட்டி மறைவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். 

2019ஆம் ஆண்டு முதல் ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் கௌதம் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பர்ப்பிள் மூட்... அனுபமா பரமேஸ்வரன்!

மோந்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு: ஆந்திர முதல்வர் தகவல்!

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக... லார்மிகா!

சபரிமலை: நவ.1 முதல் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 1-ல் பள்ளிகள் இயங்கும்!

SCROLL FOR NEXT