இந்தியா

இந்தியாவில் மேலும் 16,051 பேருக்கு கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,051 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 16,051 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2,02,131 ஆக உள்ளது.  

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 206 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 512,109 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 37,901 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,21,24,284 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 7,00,706 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 175 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 8,31,087 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தம் 76.01 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: முன்பிணை கோரிய டி.எஸ்.பி. மனு தள்ளுபடி

முன்னாள் ரயில்வே அமைச்சா் முகுல் ராய் காலமானாா்: தலைவா்கள் இரங்கல்

பிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்பு

முதல்வா், துணைமுதல்வா் தொகுதிகளில் வாக்காளா்கள் விவரம்

மெட்ரோ நிலையங்களுக்கு குருத்வாராக்களின் பெயா்களைச் சூட்ட முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT