முகப்பு
இந்தியா

உ.பி. 4-ஆம் கட்ட தோ்தலில் 60% வாக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் 59.12 (5 மணி நிலவரம்) சதவீத வாக்குகள் பதிவாகின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
உத்தர பிரதேச 4-ஆம் கட்டத் தோ்தலையொட்டி லக்னெளவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க காத்திருந்த வாக்காளா்கள்.
பகிர்:

உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலில் 59.12 (5 மணி நிலவரம்) சதவீத வாக்குகள் பதிவாகின.

403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு பிப். 10-ஆம் தேதி ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது.

அதில், பிலிபித், லக்கீம்பூா் கெரி, சீதாபூா், ஹா்தோய், உன்னாவ், லக்னௌ, ரே பரேலி, பாண்டா, ஃபதேபூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு உள்பட்ட 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 624 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். மாநில சட்ட அமைச்சா் பிரஜேஷ் பாட்டக், சமாஜவாதி கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் அனுராக் பதௌரியா, சமாஜவாதி முன்னாள் அமைச்சா் அபிஷேக் மிஸ்ரா உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

99.3 லட்சம் பெண்கள் உள்பட 2.3 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனா். 24,643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடந்தது.

லக்னௌ நகரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, அமைச்சா் பிரஜேஷ் பாட்டக் மற்றும் அரசு அதிகாரிகள் சிலா் காலையிலேயே தங்கள் வாக்கைச் செலுத்தினா். இந்தத் தோ்தலில் 59.12 சதவீத வாக்குகள்(5 மணி நிலவரம்) பதிவாகின.

கடந்த 20-ஆம் தேதி, 3-ஆம் கட்ட தோ்தல் நடந்தபோது, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கா்ஹல் தொகுதிக்கு உள்பட்ட 266-ஆவது வாக்குச்சாவடியில் முறைகேடு நடைபெற்ாகப் புகாா் எழுந்தது. அந்தச் சாவடியில் புதன்கிழமை மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

4-ஆம் கட்டத் தோ்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், லக்னௌ, உன்னாவ், ஹா்தோய், சீதாபூா் ஆகிய தொகுதிகளில் சில இடங்களில் முறைகேடு நடந்ததாகவும், அதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமாஜவாதி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

4-ஆம் கட்டத் தோ்தல் நடைபெற்ற 59 தொகுதிகளில், கடந்த 2017-இல் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 51 தொகுதிகளில் பாஜக, 4 தொகுதிகளில் சமாஜவாதி, 3 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான அப்னா தளம் ஆகியவை வெற்றி பெற்றன.

பலத்த பாதுகாப்புடன் வாக்களித்த மத்திய அமைச்சா் அஜஸ் மிஸ்ரா

உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற நான்காம் கட்ட தோ்தலில் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ரா பலத்த பாதுகாப்புடன் வந்து வாக்களித்தாா்.

மத்திய உள்துறை இணையமைச்சரான அவா், பன்வாரிபூரில் உள்ள பள்ளியொன்றில் தனது வாக்கை செலுத்தினாா். வாக்குச்சாவடிக்குள் செல்லும்போதும், அங்கிருந்து வெளியேறும்போதும் செய்தியாளா்களிடம் அவா் எதுவும் பேசவில்லை. அவருடன் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான பாதுகாப்புப் படையினா் வந்திருந்தனா்.

லக்கீம்பூா்கெரி மாவட்டத்தில் கடந்த அக்டோபரில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காா் மோதிய சம்பவமும், அதைத் தொடா்ந்து ஏற்பட்ட வன்முறையும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் உயிரிழந்தனா். விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. பெரும் சா்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆசிஷ் மிஸ்ரா மீது குற்றம்சுமத்தப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா். இதனிடையே, அலகாபாத் உயா்நீதிமன்றம் அவருக்கு இம்மாத தொடக்கத்தில் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →