முகப்பு
இந்தியா

பிகார்: ககாரியாவில் வெடிகுண்டு வெடிப்பில் 14 பேர் காயம்

பிகார் மாநிலம், ககாரியா நகரில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
கோப்புப்படம்
பகிர்:

ககாரியா: பிகார் மாநிலம், ககாரியா நகரில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் அமிதேஷ் குமார் தெரிவித்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 
முதற்கட்ட விசாரணையின்படி, ககாரியாவில் மொத்தம் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றில் இரண்டு குறைந்த அளிவிலான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

இதில், 20 முதல் 23 சிறிய ரக வெடிகுண்டுகள் தொடர்ந்து தரையில் விழுந்ததால், பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக நேரில் கண்ட ஒருவர் கூறினார்.

குண்டுவெடிப்பில் மொத்தம் 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும்,  குண்டுவெடிப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று அமிதேஷ் குமார் கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →