இந்தியா

உ.பி.யில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.

DIN


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தொடங்கியது.

உத்தரப் பிரதேசத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியுள்ளது.

சித்ரகூட், பிரயாக்ராஜ் உள்பட 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அமேதி, ரேபரலி, ராமர் கோயில் அமையவுள்ள அயோத்தி தொகுதிகள் அடங்கும். இதனால், 5-ம் கட்ட வாக்குப்பதிவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

துணை முதல்வர் கேச பிரசாத் மௌரியா சிராத்து தொகுதியில் போட்டியிடுகிறார்.

5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தால், 292 தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவடையும். மீதமுள்ள தொகுதிகளுக்கு மார்ச் 3 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்வு!

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT