உ.பி.யில் சாலை விபத்து: இருவர் பலி
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவர் பலியாகினர்.
உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவர் பலியாகினர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் கமோனாவில் வசிக்கும் ஆசாத்(30), தில்லியில் உள்ள மண்டோலாவைச் சேர்ந்த அவரது உறவினர் நசீர்(35) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பஹாசு என்ற இடத்தில் பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஆசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அலிகாரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் நசீர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
லாரி ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பியோடினார். அவரது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.