ருமேனியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் 5ஆவது சிறப்பு விமானம் இன்று காலை தில்லி வந்தடைந்தது.
ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை போா் தொடுத்தது. இதனால், அங்கு தவிக்கும் இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைகளை
மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
உக்ரைன் வான்வெளியில் சா்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால், ரோமானிய தலைநகா் புகாரெஸ்ட், ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்ட் வழியாக இந்திய மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபேரஷன் கங்கா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ருமேனியா தலைநகர் புகாரெஸ்டிலிருந்து 249 இந்தியர்களுடன் நள்ளிரவு புறப்பட்ட 5ஆவது சிறப்பு விமானம் இன்று காலை தில்லி வந்தடைந்தது.
இதன்மூலம் உக்ரைனிலிருந்து இதுவரை 1,156 இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனா்.
இதையும் படிக்க- உக்ரைன் போர்: மாணவர்களை மீட்க டிவிட்டர் கணக்குத் தொடக்கம்
இந்தியர்களுடன் ஏற்கெனவே நேற்று முன்தினம் ஒரு விமானம் மும்பைக்கும், நேற்று 3 விமானங்கள் தில்லிக்கும் வந்து சேர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.