முகப்பு
இந்தியா

கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு; பள்ளி, கல்லூரிகள் மூடல்

கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2022 at 3:03 PM
கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் (கோப்புப் படம்)
பகிர்:

கோவாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பும் புதிய வகை ஒமைக்ரான் பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

கோவாவில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதன் காரணமாக மதுபான விடுதிகள், திரையரங்குகள், அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவிகித எண்ணிக்கை அளவில் மட்டுமே மக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என கடந்த டிச. 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 

Advertisement

தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையாக கோவாவில் இன்று(ஜன.3) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஜனவரி 26 ஆம் தேதி வரை கோவாவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.