பாங்காங் ஏரியில் சீனா புதிய பாலம்: பிரதமர் மோடி மெளனம் காப்பதாக ராகுல் விமர்சனம் 
இந்தியா

பாங்காங் ஏரியில் புதிய பாலம் கட்டும் சீனா: பிரதமர் மோடி மெளனம் காப்பதாக ராகுல் விமர்சனம்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியில் சீனா புதிய பாலம் அமைத்துவருவது குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

DIN

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியில் சீனா புதிய பாலம் அமைத்துவருவது குறித்து பிரதமர் மோடி மெளனம் காப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி பாங்காங் ஏரி பகுதியில் இந்திய-சீன படை வீரா்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் இருதரப்பினருக்கு உயிா்ச்சேதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் கரையோரத்தில் சீனா புதிய பாலம் அமைத்து வருவது செயற்கைக் கோள் புகைப்படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைப் பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய பாலம் இருதரப்பு உறவில் மேலும் சிக்கலை உண்டுபண்ணியுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் த்லைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, "பிரதமர் மோடி காதுகள் அடைத்தவர் போல மெளனம் காக்கிறார். நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் காக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் சீனாவும் எல்லைப் பகுதியில் ராணுவப் பாதுகாப்புக் கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை தொடரும்!

SCROLL FOR NEXT