முகப்பு
இந்தியா

மும்பை போக்குவரத்துக் கழகத்தில் 60 ஊழியர்களுக்கு கரோனா

மும்பை போக்குவரத்துக் கழகத்தில் 60 ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 5 ஜனவரி, 2022 at 11:44 AM
கோப்புப்படம்
பகிர்:

மும்பை போக்குவரத்துக் கழகத்தில் 60 ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மூன்றாவது அலையின் தொடக்கமாக உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பாதிப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

கரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரமும் ஒன்று. மகாராஷ்டிர மாநிலம் மும்பை போக்குவரத்துக் கழகத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 

Advertisement

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டும் இப்பேருந்தில் பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

போக்குவரத்துக் கழகத்தில் 60 ஊழியர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.