முகப்பு
இந்தியா

இரட்டை முகக்கவசம் கட்டாயம்; ஐசியூ தேவைப்படாது -தில்லி மருத்துவர் அறிவுரை

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தில்லி மூத்த மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கட்டார் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:


கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் இரட்டை முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று தில்லி மூத்த மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கட்டார் தெரிவித்துள்ளார். 

தலைநகரான தில்லியில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
தில்லியில் தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 4.15 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதத்தில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்தபடியாக தில்லி உள்ளது.

இந்நிலையில் கரோனா பரவல் அபாயம் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இணையம் வாயிலாக தில்லி மூத்த மருத்துவ நிபுணர் ஆஷிஷ் கட்டார் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், கரோனா வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும். விழிப்புடன் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்கப் பழக வேண்டும். அவசியமின்றி மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். 

தற்போதைய நிலவரப்படி ஐசியூ படுக்கைகள் தேவைப்படாது. ஏனெனில் தற்போது பரவும் கரோனாவில் குறைந்த அளவிலான அறிகுறிகளே உள்ளன. தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இல்லை. 

தனிமனிதர்கள் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து நடந்தால் கரோனா பரவலைக் குறைக்கலாம் என்று கூறினார். 

முழு கட்டுரையைப் படிக்க →