இந்தியா

பிகாரில் மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு கரோனா

IANS

பிகாரில் மேலும் இரண்டு மாநில அமைச்சரவை அமைச்சர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

விவசாய அமைச்சர் அம்ரேந்திர பிரதாப் சிங் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜனக் ராம் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் சமாஜ் சுதர் அபியான் (சமூக சீர்திருத்த பிரசாரம்) நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். 

மேலும், எஸ்.சி மற்றும் எஸ்.டி அமைச்சர் சந்தோஷ் குமார் சுமன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

ஆனால், தற்போது முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் தொழில்துறை அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன் ஆகியோரின் அறிக்கைகள் எதிர்மறையாக வந்துள்ளன. 

முன்னதாக, இரண்டு துணை முதல்வர்கள் தார் கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டனர். 

இதற்கிடையில், பிகாரில் ஜனவரி 6 முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT