இந்தியா

தில்லியில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்க நேரக் கட்டுப்பாடு

DIN


புது தில்லி: தில்லியில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே திறக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தில்லி முழுவதும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தபோதும் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளில் தெரிவித்திருப்பது:

  1. தில்லியில் உள்ள அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் கடைகளும்(அத்தியாவசியம் தவிர) காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும்.
  2. ஒற்றைப்படை எண் கொண்ட கடைகள் ஒருநாளும், இரட்டைப்படை எண் கொண்ட கடைகள் ஒருநாளும் செயல்பட வேண்டும்.
  3. மூன்று மாநகராட்சிகளிலும் நாளொன்றுக்கு அங்கிகரிக்கப்பட்ட ஒரு சந்தை மட்டுமே திறக்க வேண்டும்.
  4. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT