ஒடிசாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3,679 பேர் பாதிப்பு
ஒடிசாவில் கடந்த ஒரே நாளில் 3,679 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் கடந்த ஒரே நாளில் 3,679 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியிட்ட தகவலின்படி,
ஒடிசாவில் ஒரேநாளில் 3,679 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 10.66 லட்சமாக உயர்ந்துள்ளது.
தினசரி பாதிப்பு 3.92 சதவீதத்திலிருந்து, 5.15 சதவீதமாக இன்று பதிவாகியுள்ளது. புதிதாகப் பாதிப்பு ஏற்பட்டதில் 384 குழந்தைகளும் அடங்குவார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிய உயிரிழப்புகள் ஏதுவும் பதிவாகவில்லை. இதையடுத்து இதுவரை கரோனா தொற்றுக்கு 8,468 பேர் பலியாகியுள்ளனர்.