முகப்பு
இந்தியா

காசியின் கால பைரவருக்கு முதல் முறையாக இப்படி ஒரு அலங்காரம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள பாபா கால பைரவர் கோயிலில் அமைந்துள்ள  கால பைரவருக்கு முதல் முறையாக, காவல்துறையின் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜனவரி, 2022 at 2:11 PM
காசியின் கால பைரவருக்கு முதல் முறையாக இப்படி ஒரு அலங்காரம்
பகிர்:

வாராணசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் அமைந்துள்ள பாபா கால பைரவர் கோயிலில் அமைந்துள்ள  கால பைரவருக்கு முதல் முறையாக, காவல்துறையின் சீருடை அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

காசியின் காவலர் என்று பக்தர்களால் அழைக்கப்படும் கால பைரவருக்கு, காவல்துறையினர் அணியும் தொப்பி தலையில் அணிவிக்கப்பட்டு, நெஞ்சில் காவலர்களுக்கான பதக்கமும் அணிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கையில், காவல்துறையினர் வைத்திருக்கும் தடியும், மற்றொரு கையில் புகார்களைப் பதிவு செய்வதற்கான நோட்டும் வைத்துக் கொண்டு, கால பைரவர் புதிய வடிவில் பக்தர்களுக்கு இன்று அருள்பாலித்தார்.

Advertisement

கால பைரவருக்கு இப்படி ஒரு புதிய அலங்காரம் செய்யப்பட்டிருப்பது குறித்து செய்தி பரவியதும், அதனை தரிசிக்க ஏராளமானோர் கோயிலில் திரண்டனர்.

கால பைரவரே அமர்ந்து அனைவரது புகார்களையும் பதிவு செய்து விட்டால், யாருடையதும் நிராகரிக்கப்படாது என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.