இந்தியா

நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 4,868-ஆக அதிகரிப்பு

DIN

நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,868-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது நேற்று பாதிக்கப்பட்டதை விட 15.8 சதவிகிதம் அதிகம் எனவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,281 பேருக்கும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 645 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோர் விகிதம் அதிகரித்துள்ளது. 

உருமாறிய ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) போடப்பட்டு வருகிறது.ல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT