புதிய கரோனா பாதிப்பு அதிர்ச்சிதரும் வகையில் அதிகரிப்பு 
இந்தியா

புதிய கரோனா பாதிப்பு அதிர்ச்சிதரும் வகையில் அதிகரிப்பு

நாட்டில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு நேற்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

நாட்டில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு நேற்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில்..

நாட்டில் புதிதாக 2,47,417 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளை விட 27 சதவீதம் அதிகமாகும். அதுபோல நேற்று ஒரு நாளில் மட்டும் 380 பேர் கரோனாவுக்கு உயிரிழந்தனர். இதன் மூலம் நாட்டில் இதுவரை கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4.85 லட்சமாக உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து 84,825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு 11,17,531 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தொற்று பாதிக்கப்படும் விகிதம் 13.11 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது.

இதில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,488-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரமும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானும் ஒமைக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களாக உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT