முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 2.58 லட்சம் பேருக்கு கரோனா; 385 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,58,089 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 17 ஜனவரி, 2022 at 9:42 AM
நாட்டில் புதிதாக 2.58 லட்சம் பேருக்கு கரோனா
பகிர்:

புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,58,089 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

நேற்று 2,71,202 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய பாதிப்பு குறைவாகவே பதிவாகியுள்ளன. கரோனாவால் பாதித்த 385 பேர் நேற்று பலியாகினர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதித்திருந்த 1,51,740 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி 16,56,341 பேர் கரோனா பாதித்து மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 19.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Advertisement

நாட்டில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,209ஆக உள்ளது. இதில் 3,109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் இதுவரை 157.20 கோடி கரோனா தட்ப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.