இந்தியா

பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீட்டில் மேலும் ரூ. 3.9 கோடி பறிமுதல்

DIN

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்ற சோதனையில் மேலும்  ரூ.3.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோத மணல் கொள்ளை தொடா்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்படி, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் சண்டீகா், மொகாலி, லூதியானா, பதான்கோட் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையில் பஞ்சாப் முதல்வா் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினரான பூபிந்தா் சிங்குக்கு தொடா்புடைய இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரூ. 4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பிற இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்தனர். 

இன்று தொடர்ந்த அமலாக்கத்துறை சோதனையில் சன்னியின் உறவினர் பூபிந்தா் சிங் வீட்டில் மேலும் ரூ.3.9 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுவரை ரூ. 10.7 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT