முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 43 ஆயிரம் பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 43,697 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:10 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 43,697 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 43,697 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். மேலும் 46,591 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 69,15,407 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 94.4 சதவிகிதம்.

இன்றைய நிலவரப்படி 2,64,708 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான்:

புதிதாக 214 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,074 பேர் ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.