இந்தியா

இந்தியாவிற்கு எதிரான 35 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்

DIN

இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாக பாகிஸ்தான் நாட்டின் 35 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் 35 யூடியூப் சேனல்கள் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் அத்துறையின் கூடுதல் செயலாளர் விக்ரம் சாகே பாகிஸ்தானைச் சேர்ந்த 35 யூடியூப் சானல்கள், 2 இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் கணக்குகள் ஆகியவற்றுடன் 2 இணைய தளங்களையும் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த கடந்த டிச.21 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT