முகப்பு
இந்தியா

நான் எப்போதும் முலாயம் சிங்கின் மருமகள்தான்: பாஜகவில் இணைந்த அபர்ணா யாதவ்

நான் எப்போதும் முலாயம் சிங் யாதவ் குடும்பத்திற்கு மருமகளாகவே இருப்பேன் என்று பாஜகவில் இணைந்த அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
பகிர்:

நான் எப்போதும் முலாயம் சிங் யாதவ் குடும்பத்திற்கு மருமகளாகவே இருப்பேன் என்று பாஜகவில் இணைந்த அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு நிறைய அரசியல் அறிவைக் கொடுத்தமைக்காக முலாயம் சிங்கிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் அந்தக் குடும்பத்தின் மருமகள், மருமகளாகவே இருப்பேன்.

எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது எனது கடமை. வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொள்ளும்போது பாஜகவுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன். 

தாய்மார்கள், சகோதரிகள் அனைவரும் பாஜக ஆட்சியில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கும், சமாஜவாதிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்தச் சூழ்நிலையில் சமாஜவாதி நிறுவனா் முலாயம் சிங்கின் மருமகள் அபா்ணா யாதவ் கடந்த புதன்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்குச் சென்று அக்கட்சியில் இணைந்தார். முலாயம் சிங் யாதவின் முதல் மனைவியின் மகன் அகிலேஷ் யாதவ்.

இரண்டாவது மனைவியின் மகன் பிரத்தீக் யாதவ். அவரின் மனைவி அபா்ணா யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →