முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: கார் விபத்தில் பாஜக எம்எல்ஏ மகன் உள்பட 7 மருத்துவ மாணவர்கள் பலி

கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டாலே மகன் அவிஷ்கார் உள்பட 7 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.

Updated On : 25 ஜனவரி, 2022 at 9:51 AM
மகாராஷ்டிரம்: கார் விபத்தில் பாஜக எம்எல்ஏ மகன் உள்பட 7 மருத்துவ மாணவர்கள் பலி
பகிர்:


வர்தா: மகாராஷ்டிர மாநிலம் செல்சுரா பகுதிக்கு அருகே திங்கள்கிழமை இரவு, பாலத்திலிருந்து கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பாஜக எம்எல்ஏ விஜய் ரஹாங்டாலே மகன் அவிஷ்கார் உள்பட 7 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பலியாகினர்.

மருத்துவக் கல்லூரியில் பயிலும் 7 மாணவர்களும் ஒரு காரில் டியோலியிலிருந்து வர்தா வந்து கொண்டிருக்கும் போது திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறையினர் கூறுகிறார்கள்.

கார் விபத்தில் பலியான அனைவருமே வர்தாவில் அமைந்துள்ள சாவங்கி மருத்துவக் கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் என்பதும், பலியான மாணவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.