முகப்பு
அவிநாஷ் பாண்டே
இந்தியா

ஜார்க்கண்ட் காங்கிரஸ் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.பி.என். சிங், பாஜகவில் இணைந்ததையடுத்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
அவிநாஷ் பாண்டே
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.பி.என். சிங், பாஜகவில் இணைந்ததையடுத்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆர்.பி.என். சிங் கடந்த செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார். புதிய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகக் கூறிய அவர், தேசத்துக்கும் மக்களுக்கும் கட்சிக்கும் சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். 

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஆர்.பி.என். சிங்கின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும், உத்தர பிரதேசத்தின் குஷிநகா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஆவார். 

காங்கிரஸிலிருந்து ஆர்.பி.என். சிங் விலகியதை அடுத்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →