லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்; வென்டிலேட்டர் நீக்கம் 
இந்தியா

லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்; வென்டிலேட்டர் நீக்கம்

பாடகி லதா மங்கேஷ்கரின் (92) உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

IANS


மும்பை: கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்டுள்ள பாடகி லதா மங்கேஷ்கரின் (92) உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தார் வெளியிடிருக்கும் அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நைட்டிங்கேல் என்று லதா மங்கேஷ்கரை அழைத்திருக்கும் அந்த அறிக்கையில், தொடர்ந்து அவர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த அறிகையில், லதா அம்மா தொடர்ந்து ப்ரீஸ் கேண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் வைக்கப்படுவார். இன்று காலை பரீட்சார்த்த முறையில் அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் நீக்கப்பட்டுள்ளது.

அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. எனினும், அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலேயே வைக்கப்பட வேண்டியது அவசியம். உங்களின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு ஜனவரி 11-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மும்பை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசிய பள்ளிக் கட்டட விபத்து: 50 ஆக உயர்ந்த பலி!

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு! மூவருக்கு பகிர்ந்தளிப்பு

சிவாஜிக்குப் பின் சிறந்த நடிகர் ராஜ்கிரண்: இளவரசு

கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.5,000 ஆக உயர்வு: முதல்வர் தொடக்கம்!

பூவிழி மலரோ... ஸ்ரீமுகி

SCROLL FOR NEXT