முகப்பு
இந்தியா

தில்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து; இரவு ஊரடங்கு நீடிக்கும்

தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:14 AM
தில்லி (கோப்புப்படம்)
பகிர்:

தலைநகர் தில்லியில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தலைநகர் தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த வாரமே சில தளர்வுகள் கோரி ஆளுநருக்கு முதல்வர் கேஜரிவால் பரிந்துரை செய்திருந்தார். ஆனால், அப்போதைய நிலை கருதி ஆளுநர் பரிந்துரைகளை ஏற்க மறுத்துவிட்டார். 

இந்நிலையில் இன்று ஆளுநரின் ஆலோசனைக் கூட்டத்தில் சில தளர்வுகள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தில்லி பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் கூறியதாவது;

தில்லியில் வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இரவு ஊரடங்கு நீடிக்கும். மேலும், திருமணத்திற்கு 200 பேர் வரையில் அனுமதிக்கப்படுவார்கள், மதுபான பார்கள், உணவகங்கள், தியேட்டர்களில் 50% இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.  பள்ளிகள் திறப்பு தொடர்பாக அடுத்த வாரக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். 

மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 

இன்று மாலை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு தளர்வுகள் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →