முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் எண்ணெய் தொழிற்சாலையில் தீவிபத்து: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
கோப்புப்படம்
பகிர்:

ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 

ராஜஸ்தான் மாநிலம், ஜாம்வா ராம்கர் பகுதியில் டர்பெண்டைன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொணடு வந்தனர். 

எனினும், இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானதாக வட்ட அதிகாரி ஷிவ்குமார் தெரிவித்தார். மேலும் தீவிபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →