உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மேலும் 3 வேட்பாளர்களை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அறிவித்துள்ளது.
403 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்துக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக 7 கட்டங்களாக 295 வேட்பாளர்களை அறிவித்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) மேலும் 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 298 பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஜஸ்வந்த் நகர் தொகுதியில் விவேக் ஷக்யா மற்றும் ஹமீர்பூர் தொகுதியில் மனோஜ் பிரஜபதி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படாது என பாஜக ஏற்கெனவே அறிவித்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆந்திர அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்வு
பாஜகவின் இந்த நகர்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக கர்ஹல் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 15-ம் தேதி முதற்கட்டமாக 107 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதன்பிறகு, ஜனவரி 21-ம் தேதி 85 வேட்பாளர்கள் அடங்கிய 4-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 28-ம் தேதி 91 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.