முகப்பு
இந்தியா

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்: ஒருவர் கைது

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:16 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜெய்ப்பூர்:  ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ரூ.25.37 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில், துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வந்த ஒரு பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் இடைமறித்து சோதனையிட்டபோது பாலிதீன் மாத்திரைகளில் மறைத்து உடலில் மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ரூ.25,37,865 மதிப்புள்ள 99.50 சதவீதம் தூய்மையான 512.700 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறைச் சட்டம் 1962 இன் விதிகளின் கீழ் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியையும் கைது செய்தனா். 

கைது செய்யப்பட்ட பயணியிடம் மேலதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →