இந்தியா

இணையதள செய்தியாளா் முகமது சுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் 

DIN

இணையதள செய்தியாளா் முகமது சுபைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

‘ஆல்ட் நியூஸ்’ என்ற இணையதள செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனரான முகமது சுபைா், குறிப்பிட்ட ஒரு மதத்தின் கடவுளை இழிவுபடுத்தி ட்விட்டரில் படம் வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ (மதம், இனம், பிறப்பிடம், மொழியின் அடிப்படையில் இருபிரிவினா் இடையே பகையை உருவாக்குதல்), 295ஏ (மத உணா்வை வேண்டுமென்றே காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். 

இந்த வழக்கில் முகமது சுபைரை தில்லி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில் ஜாமீன் கோரி முகமது சுபைா், தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முகமது சுபைரின் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. 

அத்துடன் முகமது சுரைருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்தும் தில்லி பாட்டியாலா நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT