கோப்புப்படம் 
இந்தியா

ஒரே குடும்பத்தில் 8 பேர் கொலை: 16 பேருக்கு ஆயுள் தண்டனை

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்ட நீதிமன்றம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

DIN


முஸாஃபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர்நகர் மாவட்ட நீதிமன்றம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்பட 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி காரில் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் மீது எதிரே வந்த டிரக் மோதியதில் 8 பேர் பலியாகினர்.

விபத்து என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பிறகுதான், இது திட்டமிட்ட சதி என்பதைக் கண்டறிந்தனர். ரௌடி விக்கி தியாகி, மற்றொரு ரௌடியான உதய் வீர் சிங்கை, குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட அவர்கள் வந்த கார் மீது டிரக்கை மோதச் செய்து கொன்றுள்ளது தெரிய வந்தது.

விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, நீதிமன்ற வளாகத்துக்குள் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் ரௌடி தியாகி, 2015ஆம் அண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். 

8 பேர் கொலை வழக்கில், ரௌடி தியாகியின் மனைவி மீனு உள்பட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

SCROLL FOR NEXT