கடந்த ஜூன் மாதம் தஞ்சாவூா் மாவட்டம், கல்லணையை பாா்வையிட்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் தலைவா் எஸ்.கே. ஹல்தா் மற்றும் குழுவினர்.  
இந்தியா

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் 3-வது முறையாக ஒத்திவைப்பு!

தில்லியில் நாளை நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் நாளை நடைபெறவிருந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மேக்கேதாட்டுவில் அணை கட்டும் கா்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீா்ப்புக்கு எதிரானது என்றும் மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், தில்லியில் நாளை நடைபெறவிருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜூன் 17 ஆம் தேதி கூட்டம் நடைபெறாத நிலையில் ஜூன் 23க்கும் அதன்பின்னர் ஜூலை 6 ஆம் தேதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழுத் தலைவர் ஹல்தர் தலைமையிலான குழு கடந்த ஜூன் 17 ஆம் தேதி மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கத்தில் பங்கம்!

புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!

தமிழகத்தில் ஆக.28 வரை வெப்பம் அதிகரிக்கும்!

போக்ஸோவில் பள்ளிக் காவலாளி கைது

அயோத்தி அரச குடும்ப வாரிசு, ராமா் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினா் காலமானாா்!

SCROLL FOR NEXT