இந்தியா

ஆப்கனில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

ANI

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 

கிழக்கு நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மாகாணங்கள் மற்றும் நாட்டின் வடக்கே பர்வானில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளன என்று ஜநா மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ஜூலை 5, 6 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் 280-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அத்துடன் 4 பாலங்கள் மற்றும் 8 சாலை உள்பட 9 மாகாணங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

ஜூன் மாதத்தில் 2 நாள்கள் பெய்த கனமழையில் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 131 பேர் காயமடைந்தனர். ஒரே மாதத்திற்குள் கிழக்கு பிராந்தியத்தில் திடீர் வெள்ளம் ஏற்படுவது இது 2-வது முறையாகும். 

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக, நூரிஸ்தான் மாகாணத்தில், குனார் முதல் நூரிஸ்தானின் மையப்பகுதி வரையிலான சாலை போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT