முகப்பு
இந்தியா

நாளை சூரத் இயற்கை விவசாய மாநாடு: பிரதமர் மோடி உரை

சூரத்தில் நடைபெறும் இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெறும் இயற்கை விவசாய மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை காணொலி காட்சி வாயிலாக உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரதாந்த் மற்றும் முதல்வர் பூபேந்திர படேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் மோடி, ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது 75 விவசாயிகளாவது இயற்கை விவசாயத்தை பின்பற்றுமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார்.

பிரதமர் அலுவலக அறிக்கையின் படி, ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் குறைந்தது 75 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இயற்கை விவசாயம் செய்ய ஊக்கமும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு 90 வெவ்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக மாவட்டம் முழுவதும் 41,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிற்சி பெற்றனர்.

சூரத்தில் இயற்கை விவசாயத்தை ஏற்றுக்கொள்வதை சாத்தியமாக்கிய ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பிற அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புக்கு இந்த மாநாடு சான்றாக இருக்கும் என பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →