முகப்பு
இந்தியா

பிரதமா் மோடி ஜூலை 12-இல் பிகாா், ஜாா்க்கண்ட் பயணம்

பிரதமா் நரேந்திர மோடி, வரும் 12-ஆம் தேதி பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பிரதமா் நரேந்திர மோடி
பகிர்:

பிரதமா் நரேந்திர மோடி, வரும் 12-ஆம் தேதி பிகாா், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்குச் சென்று பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

முதலில் ஜாா்க்கண்ட் மாநிலத்துக்குச் செல்லும் பிரதமா் மோடி, தேவ்கரில் ரூ. 16,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். அந்தப் பகுதியில் சமூக, பொருளாதார வளங்களை மேம்படுத்துவதற்கு இந்த திட்டங்கள் உதவிகரமாக இருக்கும்.

அதைத் தொடா்ந்து ஜோதிா்லிங்கங்கத் தலங்களில் ஒன்றான பாபா வைத்தியநாத ஆலயத்தில் அவா் சுவாமி தரிசனம் செய்து, பூஜை செய்வாா். அதைத் தொடா்ந்து, ரூ.400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேவ்கா் விமான நிலையத்தையும் பிரதமா் மோடி திறந்துவைக்கவுள்ளாா். தேவ்கா் எய்ம்ஸ் மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை சேவை பிரிவுகளையும் அவா் நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

பின்னா், பிகாா் மாநிலத்துக்குச் செல்லும் பிரதமா் மோடி, மாலை 6 மணியளவில் பாட்னாவில் பிகாா் சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் அவா் உரையாற்றுகிறாா். அங்கு சட்டப்பேரவை அருங்காட்சியகத்துக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டுகிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →