கோப்புப்படம் 
இந்தியா

தெலங்கானா: நாளை முதல் 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தெலங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திங்கள்கிழமை (ஜூலை 11) முதல் 13 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


ஹைதராபாத்: தெலங்கானாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திங்கள்கிழமை (ஜூலை 11) முதல் 13 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவழை வலுப்பெற்றுள்ளதன் காரணமாகவும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபல்பள்ளி, நிசாம்பாத், ராஜண்ணா சிர்கிலா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தெலங்கானாவில் ஞாயிற்றுக்கிழமையும், திங்கள்கிழமையும் அதிகனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து மாநிலத்தில் பெய்து கனமழை வெள்ளம் குறித்து முதல்வர் சந்திரசேகர ராவ் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். 

கூட்டத்திற்குப் பின்னர், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை திங்கள்கிழமை (ஜூலை 11,12,13) ஆகிய 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே வருமாறு முதல்வர் சந்திரசேகர ராவ் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT