முகப்பு
இந்தியா

இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் விவசாயம் சார்ந்த நாடு இந்தியா: பிரதமர்

இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் விவசாயம் சார்ந்த நாடு இந்தியா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:45 AM
பகிர்:

இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் விவசாயம் சார்ந்த நாடு இந்தியா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி, இயற்கை விவசாயம் குறித்த மாநாட்டில் இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சூரத் பகுதியில் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றி அதனை வெற்றியடையச் செய்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் இதில் தொடர்புடைய ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் மாநாட்டில் குஜராத் ஆளுநர் மற்றும் முதல்வரும் கலந்து கொண்டனர். மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 75 விவசாயிகளை, இயற்கை விவசாயத்துடன் இணைத்து சூரத் பெற்ற வெற்றி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாக திகழும். 

நமது வாழ்க்கை, நமது சுகாதாரம், நமது சமுதாயத்தின் அடிப்படை நமது விவசாய முறை தான். இயற்கையாகவும் கலாச்சார ரீதியாகவும் இந்தியா, விவசாயம் சார்ந்த நாடு. எனவே, நமது விவசாயிகள் முன்னேற்றமடைந்தால், விவசாயமும் முன்னேறி, செழிப்புறும், அதன் மூலம் நாடும் முன்னேறும். நீங்கள் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், நீங்கள் பூமித் தாய்க்கு சேவையாற்றலாம், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கலாம், அதன் உற்பத்தித் திறனை மேம்படுத்தலாம் என்பதோடு, கோமாதாவுக்குப் பணியாற்றும் பாக்கியத்தையும் நீங்கள் பெறுவீர்கள். 

பல நூற்றாண்டுகளாக இந்தியா, உலகை வழிநடத்தும் துறைகளில் விவசாயமும் ஒன்று, எனவே,  இயற்கை விவசாயப் பாதையில் மேலும் முன்னோக்கிச் செல்லவும், புதிதாக உருவாகும் உலகளாவிய வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும் இதுவே சரியான தருணம். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க,  ‘பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம், பாரம்பரிய விவசாயத்திற்குத் தேவையான வளம் மற்றும் பயிற்சியை அளிக்கிறது. பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்‘ மூலம் 10 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் கொண்டுவரப்படும். 

இயற்கை விவசாயம், கங்கை சீரமைப்புத் திட்டத்துடன் இணைக்கப்பட்டு, கங்கை ஆற்றங்கரை நெடுகிலும் இயற்கை விவசாய பெருவழித்தடத்தை உருவாக்க தனி இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →